இன்று அதிகாலை, வௌியாட்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ராகம வைத்திய பீடத்தின் 04 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்களில் மூவர் ராகம வைத்தியசாலையிலும் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராகம வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் சில மாணவர்கள் மீது விடுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.