செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை பாதுகாக்க, ரஷ்யா பராட்ரூப்பர்களை (Paratrooper) அனுப்ப உள்ளது என ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய துருப்புக்கள் தங்கள் படையெடுப்பின் முதல் நாளில் செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய கைப்பற்றியது.
“பராட்ரூப்பர்” (Paratrooper) என்பது உலகின் எந்த இராணுவ அமைப்பிலும் ஒரு உயரடுக்காக இருக்கும் தனி இராணுவ அமைப்பாகும்.
இந்த இராணுவ அமைப்பையே தற்போது செர்னோபில் அணுமின் நிலையத்தை பாதுகாக்க ரஷ்யா பயன்படுத்தியுள்ளது.