follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு : சிற்றுணவக பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க தீர்மானம்!

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு : சிற்றுணவக பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க தீர்மானம்!

Published on

சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், சிற்றுணவக தொழிற்துறை வீழ்ச்சியடையும்.இது பாரிய பிரச்சினையாகும்.

எனவே, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தங்களது தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் தாங்கள் விரும்பியவாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு சிற்றுணவக உரிமையாளர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், தாங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டால், உண்மையில் இந்த தொழிற்துறை வீழ்ச்சியடையும் என சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட மூவாயிரத்து 900 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 3,700 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் பெரும்பாலும் இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த எரிவாயு அடுத்த மாத முற்பகுதியின் சில தினங்கள் வரையில் போதுமானதாகும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...