follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

Published on

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நிலவரப்படி இன்று  அதிகாலை 5:41 மணிக்கு பிலிப்பின்ஸின் தாவோ ஓரியண்டல் மாகாணத்தின் தர்கோனா நகரத்திலிருந்து தென்கிழக்கே 136 கிலோமீற்றர் தொலைவில் 96 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் முதலில் ரிச்டா் அளவுகோலில் 6.2 என்று அறிவித்தது, பின்னர் 5.7 ஆகக் குறைத்தது.

இந்த நிலநடுக்கம் மிண்டனாவ் தீவில் அருகிலுள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டது. டெக்டோனிக் நிலநடுக்கம் அதிர்வுகளைத் தூண்டும் ஆனால் சேதத்தை ஏற்படுத்தாது என்று நில அதிர்வு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

பிலிப்பைன்ஸ் பசிபிக் எரிமலைப் பகுதியில் (ரிங் ஆஃப் ஃபயர்) அமைந்துள்ளதால் அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகளைளுக்கு உள்ளாகிறது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...