follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தடை

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தடை

Published on

கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் நேட்டோ படைகள் பின் வாங்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.

தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு மீண்டும் மனித உரிமை மீறல், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. சில நாள்களுக்கு முன், 6ஆம் வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதித்தனர். இந்த சம்பவத்திற்கு உலகளவில் பல்வேறு நாடுகள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஆப்கான் தலைநகர் காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தலிபான்கள் தடை விதித்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டதால் உணவு பாதுகாப்பின்மையில் உலகளவில் முதல் இடத்திற்கு ஆப்கானிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. 2.3 கோடி மக்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், மொத்த மக்கள் தொகையில் 95 சதவீதம் பேர் சரியான உணவு கிடைக்காமல் உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...