follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகாலி முகத்திடல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படாமைக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

காலி முகத்திடல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படாமைக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

Published on

காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, தாக்குதல் நடத்தியவர்கள் மாத்திரம் இதுவரை கைது செய்யப்படாமை கண்டனத்திற்குரிய விடயமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், காலி முகத்திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது, திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

வன்முறைகளில் ஈடுபட்டிருந்தவர்கள், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில் அலரிமாளிகைக்கு வந்திருந்தனர்.

இதில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்புள்ளது. எனவே, காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...