follow the truth

follow the truth

July, 4, 2025
Homeவிளையாட்டுமுதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு

முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு

Published on

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 260  ஓட்டங்களை எடுத்திருந்தது.

தினேஷ் சந்திமால் 39 ஓட்டங்களுடனும், நிரோஷன் திக்வெல்ல 61 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இருவரும் 7 ஆவது விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிட்டகாங் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 397  ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 465 ஓட்டங்களை எடுத்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...