follow the truth

follow the truth

July, 6, 2025
Homeவணிகம்லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு CSR திட்டத்தை அறிமுகம் செய்யும் HNB FINANCE

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு CSR திட்டத்தை அறிமுகம் செய்யும் HNB FINANCE

Published on

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, Lady Ridgeway வைத்தியசாலையை மையமாகக் கொண்ட தனது நிறுவன ரீதியான அணுகுமுறையின் கீழ் சமீபத்திய திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தின் கீழ், ரிட்ஜ்வே மருத்துவமனையின் வார்டு எண் 9ல் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான வசதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

No description available.

HNB FINANCE நடத்தும் நிறுவன ரீதியான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ், வார்டு எண். 9க்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், சிகிச்சை பெற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. இதுதவிர இதன் கீழ் வார்டு எண் 9 பழுது பார்க்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. மேலும், HNB FINANCE ஊழியர்கள் குழந்தைகளை பாட வைத்தும் நடனமாட வைத்தும் மகிழ்வித்தனர்.

இதன்போது, ​​சிறுவர் வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன, தாதியர் எல். ஜயரத்ன மற்றும் HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

HNB FINANCE தனது நிறுவன சமூகத் திட்டங்களின் கீழ், நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கப் போகும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குத் தேவையான வசதிகளையும் ஆதரவையும் வழங்கி அவர்களின் எதிர்கால இலக்குகளுக்கு அழைத்துச் செல்வதற்கு எப்போதும் பங்களித்து வருகிறது. மேலும், இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கம், உகந்த சிகிச்சையை வழங்குவதற்கு தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் குழந்தைகளைப் பாதுகாப்பதாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை, ரிதீமாலியத்த விவசாய குடும்பங்களை கல்வி மூலம் வலுவூட்டும் C. W. Mackie PLC

இலங்கையின் பல்துறை வியாபார நிறுவனமும், Scan Jumbo Peanuts பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான C.W. Mackie PLC...

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அபிவிருத்திக்கு உதவும் Fashion Bug

இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை...