கனடா பிரதமராக பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இவர்களது விவாகரத்து தொடர்பிலான செய்திகள் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகின்றதொன்றாகியது.
51 வயதான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் 48 வயதான அவரது மனைவி சோஃபி கடந்த 2005-ல் மண வாழ்க்கையில் இணைந்தனர். இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
“அனைவருக்கும் வணக்கம். சோஃபியும் நானும் இந்த உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீண்ட ஆலோசனைக்கு பின்னர் நாங்கள் இருவரும் கலந்து பேசி பிரிவதாக முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தி கொண்டுள்ளோம். அது தொடரும். எங்கள் குழந்தைகளின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி” என தனது பதிவில் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இவர்களுக்கு சேவியர் (15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.
அவர்கள் ஒரு நெருங்கிய குடும்பமாக இருக்கிறார்கள், சோபியும் பிரதமரும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான, அன்பான மற்றும் கூட்டுச் சூழலில் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ட்ரூடோவின் அப்பா பியர்ரி ட்ரூடோவும் தனது மனைவி மார்கரெட்டை 1979-ல் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.