follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1தொடர்ந்தும் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்ந்தும் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published on

நிலவும் சீரற்ற காலநிலையினால் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை மாலை வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மணித்தியாலயத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...