follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுயசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் செலுத்தத் தவறிய கடனை மக்கள் வங்கிக்கு மீள வழங்க உத்தரவு

யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் செலுத்தத் தவறிய கடனை மக்கள் வங்கிக்கு மீள வழங்க உத்தரவு

Published on

யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் செலுத்தத் தவறிய கடனை மீளப்பெறுவதற்கு மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 120 மில்லியன் ரூபா குறுகிய கால கடன் வசதிக்கான தொகையை மீட்பதற்காக, வங்கி மேல் மாகாண வர்த்தக மேல் நீதிமன்றில் எண். 90/99(1), வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், மேற்படி வழக்கிற்கு உயர்நீதிமன்றம் சமீபத்தில் மக்கள் வங்கிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 4ம் திகதி நிராகரித்துள்ளது.

அதன் பிரகாரம் கடன் வசதி தொடர்பில் செலுத்த வேண்டிய தொகையை மீளப்பெறுவதற்கு மக்கள் வங்கிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக மக்கள் வங்கி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.ஏ. பார்த்தலிங்கம் அவர்களுடன் ஜனாதிபதியின் சட்டத்தரணி குஷான் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ஹிரான் ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த்

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சு...

நாளை 12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், நாளை (ஜூலை 07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30...

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...