இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவமதிக்கும் கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மரணம் குறித்து இதுபோன்ற கருத்துகளை ஏற்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“சனத் நிஷாந்தவின் மரணம் அவரின் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு பெரும் இழப்பாகும். அவரது மரணம் குறித்து சமூகவலைத்தளங்களில் மிக மோசமான பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. தினமும் யார் கருத்துக்களை பதிவிடுகிறார்கள் என்பதை இது மேலும் தெளிவாக்கியது. ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள்தான் இவற்றைப் பதிவிட்டு வருகின்றனர்.. இல்லையேல், கடவுளே, ஒருவர் இறக்கும் போது, இப்படி யாராவது இழிவுபடுத்துவார்களா?. நாங்கள் இது குறித்து தேடினோம்..
தேடலில், ஒரு கட்சியினை பிரதிநிதித்துவம் செய்யும் சிலர் போலியான கணக்குகளை வைத்து இவ்வாறு செய்வதாக தெரிய வந்தது.. இப்போது நாம் அவர்களை கண்டுபிடிக்க முடியும். முன்னர் என்றால் அதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது..”