இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் பிரபோவா சுபியாண்டோ (Prabowo Subianto) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
72 வயதான சுபியாண்டோ, முன்னாள் இராணுவத் தளபதியும், இந்தோனேசியா குடியரசின் முன்னாள் ஜனாதிபதி சுஹார்டோவின் மருமகனும் ஆவார்.
முதற்கட்ட வாக்கெடுப்பில் 57% வாக்குகளைப் பெற்ற அவர் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின்றி புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது வெற்றியை ஏற்கனவே கொண்டாடி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவருடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய ஜகார்த்தாவின் முன்னாள் ஆளுநர்களான கனாஜர் பிரனோவோ மற்றும் அனீஸ் பஸ்வேடன் ஆகியோர் முறையே 17% மற்றும் 25% வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகள் மேலும் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை பொறுத்திருக்குமாறு தோல்வியடைந்த இருவரும் பொதுமக்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உலகில் ஒரே நாளில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்தலாக கருதப்படும் இந்தோனேசியாவில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முடிவு மார்ச் 20ம் திகதி வெளியாக உள்ளது.
இந்த தேர்தலில் 200 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.