follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2இரவோடு இரவாக இஸ்ரேல் மீது பாய்ந்த ட்ரோன்கள்

இரவோடு இரவாக இஸ்ரேல் மீது பாய்ந்த ட்ரோன்கள்

Published on

இஸ்ரேல் மீது திடீரென ஈரான் மிகப் பெரியளவில் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி தெஹ்ரானில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரான் இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்தாலும் அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய எல்லைகளுக்கு வெளியே இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலின் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

இதில் 10க்கும் மேற்பட்ட க்ரூஸ் ஏவுகணைகள் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த தாக்குதலில் 7 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

ஈரான் இந்த தாக்குதலுக்காக 200 க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலை தடுத்து நிறுவத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன், “இஸ்ரேலுக்கு எங்கள் பாதுகாப்பு நிச்சயம் இருக்கும்.. இஸ்ரேல் மக்களுடன் அமெரிக்கா நிற்கும்.. ஈரானின் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக அவர்களுக்குப் பக்கபலமாக இருப்போம்” என்றார். இஸ்ரேல் தனியாக இல்லை அவர்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்தார். இது தவிர அமெரிக்க அதிபர் பைடனும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதல் பதட்டத்தை அதிகரித்து, பிராந்திய அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது. ஈரான் மீண்டும் தனது நடவடிக்கையால் மீண்டும் அங்கே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து எப்போதும் இஸ்ரேல் பாதுகாப்பிற்காகத் துணை நிற்போம். இஸ்ரேல் மட்டுமின்றி அங்குள்ள ஜோர்டான் மற்றும் ஈராக் உட்பட நமது அனைத்து பிராந்திய நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம், பிரச்சினை மேலும் அதிகரிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் வான்வழித் தாக்குதல்களைக் கனடா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம். ஈரானின் இந்த நடவடிக்கை அங்கே குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் குலைக்கிறது. இந்தத் தாக்குதல்களில் இருந்து தன்னையும் அதன் மக்களையும் பாதுகாக்க இஸ்ரேலுக்கு முழு உரிமை இருக்கிறது” என்றார்

ஜெர்மனியும் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானும் அதன் பிராக்ஸிக்களும் உடனடியாக இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு தங்கள் சப்போர்ட் இருக்கும் என்றும் ஜெர்மனி தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்திய தாக்குதலை பிரான்ஸ் நாடும் கடுமையாகக் கண்டித்துள்ளது.. இது போன்ற நடவடிக்கை அங்கே அமைதியைச் சீர்குலைப்பது மட்டுமின்றி ராணுவ பதற்றத்தையும் அதிகரிக்கிறது என்று பிரான்ஸ் சாடியுள்ளது.

இது தவிர உலக நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின், நெதர்லாந்து, நார்வே, செக் குடியரசு, பராகுவே, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ஈரானைக் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஈரான் இப்போது டிரோன் தாக்குதலை நடத்தி இருக்கும் நிலையில், வரும் நாட்களில் தாக்குதல் அதிகரிக்கலாம் என்றும் இதனால் அந்த பிராந்தியத்தில் அமைதி சீர்குலையும் என்று அஞ்சப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...