முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.