follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் கொடுப்பது மிகவும் ஆபத்தானது

குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் கொடுப்பது மிகவும் ஆபத்தானது

Published on

சந்தையில் வாங்கப்படும் பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அரச வைத்தியர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்த பொம்மைகளில் லித்தியம், சில்வர் ஆக்சைடு மற்றும் அல்கலைன் பட்டன் பேட்டரிகள் (Button batteries) இருப்பதால், குழந்தைகள் அவற்றை விழுங்கி, காது அல்லது மூக்கில் வைக்கலாம் என்று வைத்தியர் கூறினார்.

இந்த மின்கலங்களை குழந்தைகள் விழுங்கினால், அதன் மின் இரசாயனச் செயற்பாட்டின் ஊடாக குழந்தைக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என வைத்தியர் பாலித ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

உணவுக் பாதையின் (உணவுக் குழாய்) முதல் பகுதி இயற்கையாகவே குறுகலாக இருப்பதால், இவற்றை விழுங்கும்போது அதிகபட்ச சேதம் (துளை) ஏற்படக்கூடும் என்றும், விழுங்கப்பட்ட பேட்டரி வயிற்றில் பயணித்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதனூடாக வயிற்றில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கள் கூட ஏற்படுவதுடன் சுவாசக் குழாய் அடைப்பு காரணமாக உயிரிழப்புக்கள் கூட ஏற்படலாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சிறு குழந்தையொன்று இவ்வாறான விபத்தில் சிக்கினால் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறும், அதுவரை 10 நிமிடங்களுக்கு 2 டீஸ்பூன் சுத்தமான தேனை குழந்தைக்கு முதலுதவியாக வழங்குமாறும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...