வலப்பனை – படகொல்ல புஸ்ஸதேவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக 21 மாணவர்கள் வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.