follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

Published on

2024 உயர்தரப் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து மாத்திரம் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்த பரீட்சை ஆணையாளர், உயர்தரப் பரீட்சை தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பல தவறான விளம்பரங்கள் நடப்பதாகத் தோன்றுவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்படி உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் மாணவர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மை காணப்பட்ட நிலையில் அதனை சரிசெய்வதற்காக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரம் எப்போதும் நம்புமாறும், சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் பரீட்சை ஆணையாளர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி, உயர்தரப் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகள் மிக விரைவில் பரீட்சார்த்திகளிடம் கையளிக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், பல மாணவர்களிடமிருந்து பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு தனக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் கோரிக்கைகள் வந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக மிகவும் ஒழுங்கற்ற முறையில் பரீட்சைகளை நடாத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர், 2025ஆம் ஆண்டின் இறுதியில் பரீட்சைகளை முறையாக நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...