follow the truth

follow the truth

November, 8, 2024
Homeவிளையாட்டுஜிம்பாப்வே கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம்

ஜிம்பாப்வே கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம்

Published on

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதம்) ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு வெளியில் மேற்கொள்ளும் முக்கிய சுற்று பயணமாக இது அமைந்திருக்கிறது.

இந்த தொடரின் டி20 போட்டிகள் டிசம்பர் 9, 11, 12 திகதிகளிலும், ஒருநாள் போட்டிகள் டிசம்பர் 15, 17, 19 திகதிகளிலும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கூடுதலாக இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் சேர்க்க விருப்பம் தெரிவித்தது.

இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்திருக்கிறது.

அதன்படி, கிறிஸ்துமஸ் மறுநாள் (டிசம்பர் 26) அன்று பாக்ஸிங் டே டெஸ்டில் இரு அணிகளும் மோத உள்ளன. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் திகதி 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.

இதற்கு முன்பாக ஜிம்பாபே அணி சொந்த மண்ணில் 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடியது.
இதைத்தொடர்ந்து 28 வருடங்கள் கழித்து மீண்டும் சொந்த மண்ணில் பாக்ஸிங் டே டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

ஜிம்பாப்வே – ஆப்கானிஸ்தான் தொடர் விவரம்;

டி20 தொடர்

முதல் டி20 போட்டி – டிசம்பர் 09
2வது டி20 போட்டி – டிசம்பர் 11
3வது டி20 போட்டி – டிசம்பர் 12

ஒருநாள் தொடர்;

முதல் ஒருநாள் போட்டி – டிசம்பர் 15
2வது ஒருநாள் போட்டி – டிசம்பர் 17

டெஸ்ட் தொடர்;

முதல் டெஸ்ட் போட்டி – டிசம்பர் 26 – 30
2வது டெஸ்ட் போட்டி – ஜனவரி 02 – 06 (2025)

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்க தீர்மானம்

பங்களாதேஷ் கிரிக்கட் வீரர் ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்குவதற்கு அந்நாட்டு நிதி புலனாய்வு பிரிவு...

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கான இலங்கை “ஏ” குழாம்

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். சுற்றுப்பயணத்தின்போது, ​​இலங்கை இரண்டு நான்கு நாள் போட்டிகளிலும் மூன்று...

ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு 29 இலங்கை வீரர்கள்

ஐபிஎல் 2025 வீரர்கள் ஏலத்தில் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 1,165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும்...