ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்து அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
அவ்வகையில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
முன்னதாக இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் அப்போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆகவே அரையிறுதியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.