செப்டம்பர் மாதத்தில் பலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
சமீபத்திய நாட்களில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக கனடா மாறும் என்று பிரதமர் மார்க் கார்னி மேலும் கூறினார்.
“காசாவில் ஏற்படும் துன்பத்தின் அளவு தாங்க முடியாதது” என்று கார்னி நேற்று (30) தெரிவித்திருந்தார்.
இதேபோல், இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்தில் பலஸ்தீன அரசை ஐக்கிய இராச்சியம் அங்கீகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய இராச்சியம் இந்த அறிவிப்பை வெளியிட்ட ஒரு நாளுக்குப் பிறகு, பிரான்சும் இதேபோன்ற திட்டத்தை முன்வைக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.