follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP1இலங்கையின் கடன் திட்டம் குறித்து IMF இனது தெளிவுபடுத்தல்

இலங்கையின் கடன் திட்டம் குறித்து IMF இனது தெளிவுபடுத்தல்

Published on

இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என IMF ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இன்று (01) நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து ஜனாதிபதி மற்றும் குழுவினருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இது தொடர்பான கலந்துரையாடல்களுக்காக இலங்கைக் குழுவொன்று வாஷிங்டனுக்கு வந்துள்ளதாகவும், இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,856 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக...

2009க்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து?

'2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும்.' என்று, 2025 ஜூன் மாதம்...

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட...