follow the truth

follow the truth

December, 13, 2024
HomeTOP1முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில்வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகம் பின்வரும் பலன்களை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரின்
ஓய்வூதியத்துக்கும், கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் செயலக கொடுப்பனவுக்கும் உரித்துடையவர்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 03 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், Mercedes Benz -600 maybatch (B/P) car 2008, Toyota Land Cruiser – 2017, Mercedes Benz – G63 AMG 4*4 2850 jeep 2013 ஆகிய 03 வாகனங்கள் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்காக மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக 1950 லீற்றர் வழங்கப்படுவதுடன், அந்த வாகனங்களுக்காக மூன்று சாரதிகள் வழங்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் மூன்று கொமாண்டோ அதிகாரிகள், 37 ஏனைய சிப்பாய்கள் மற்றும் 4 இதர பிரிவு அதிகாரிகளும் 19 இதர நிலைகளும் இருப்பதோடு இவ்வாறு மொத்தம் 07 இராணுவ அதிகாரிகள் மற்றும் 56 ஏனைய சிப்பாய்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக சேவையில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு மேலதிகமாக 180 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பொலிஸ் சாரதிகளும் உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மதிப்பிடுவதற்கு தற்போது அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இது தொடர்பில் தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் சோதனை

சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார...

முதல் தடைவயாக 200 பில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டிய சுங்கத் திணைக்களம்

2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான...

பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை ஆர்வம்

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie...