follow the truth

follow the truth

December, 13, 2024
Homeஉலகம்250 கிராம் உருளைக்கிழங்கு காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு (வீடியோ)

250 கிராம் உருளைக்கிழங்கு காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு (வீடியோ)

Published on

சமையலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 250 கிராம் உருளைக்கிழங்கு திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்த நபரொருவர் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோட்வாலி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது, இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மன்னபுர்வா பகுதியைச் சேர்ந்த விஜய் வர்மா என்ற நபர் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்கு தொடர்பு கொண்டு இந்த திருட்டு குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி பொலிசார் வந்து விசாரித்தபோது 250 கிராம் உருளைக்கிழங்கு திருட்டு போனதாக தெரிவித்துள்ளார்

சமைப்பதற்காக உருளைக்கிழங்குகளை ஒதுக்கி வைத்ததாகவும், ஆனால் திரும்பி வந்து பார்த்தபோது அவற்றை காணவில்லை என்றும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்

இதுபற்றி யாரேனும் சந்தேகப்படுகிறீர்களா என பொலிசார் அவரிடம் கேட்டபோது, ​​பொலிசார் கண்டுபிடித்து விடுவார்கள் என நம்புவதாக கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

400 பில்லியன் டொலர் சொத்துக்களை சேகரித்த முதல் நபர் எலான் மஸ்க்

உலகின் 400 பில்லியன் டாலரைத் தாண்டிய உலகின் முதல் நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றுள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ்...

இலஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (75 வயது) கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஊழல் வழக்கில் சிக்கி அல்லோலப்பட்டு...

வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை கிடையாது – ட்ரம்ப்

அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க டொனால்ட ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி...