follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1மாத்தறை கடற்கரை வீதியின் போக்குவரத்து மட்டு

மாத்தறை கடற்கரை வீதியின் போக்குவரத்து மட்டு

Published on

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு மாத்தறை கடற்கரை வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் வாக்கு எண்ணும் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேர்தல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தின்படி, வரும், 12ம் திகதி மதியம், 12:00 மணிக்கு. எதிர்வரும் 2ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நண்பகல் 12.00 மணிக்கு மாத்தறை கரையோர வீதியில் ரணவிரு சுற்றுவட்டத்திலிருந்து எலியகந்த வரையிலான வீதியில் வாக்குப்பெட்டிகள் அந்தந்த மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் போது போக்குவரத்து நிறுத்தப்படும்.

இதன் காரணமாக அந்த வீதியை தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்படி, மாத்தறையில் இருந்து கதிர்காமம் நோக்கியும் கதிர்காமத்திலிருந்து மாத்தறை நோக்கியும் செல்லும் வாகனங்கள் புதிய தங்காலை வீதி மற்றும் பழைய தங்காலை வீதி ஊடாக பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (11)...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

UPDATE - 09.30 ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி,...