follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

Published on

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், வேட்பாளர்கள் அமைத்துள்ள தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை (12) நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான தேர்தல் கண்காணிப்பில் பங்கேற்கும் ஆசிய நாடுகளின் தேர்தல் ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

ஐரோப்பிய அமைப்பு உள்ளிட்ட சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே நாட்டுக்கு வந்துள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் மேலும் பலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த இறுதி பிரச்சார கூட்டங்கள் இன்று மாலை நடைபெறவுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் இறுதிப் பிரமாண்ட பேரணி இன்று மாலை கம்பஹா மாநகர சபை மைதானத்திலும், பிலியந்தலை சோமவீர சந்திரசிறி விளையாட்டரங்கிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி மாபெரும் பேரணி அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு அளுத்கடை சந்தியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இறுதிப் பேரணியானது நாமல் ராஜபக்ஷ தலைமையில் தங்காலை கார்ல்டன் வீடமைப்புத் தொகுதியில் நடைபெறவுள்ளதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சர்வஜன அதிகாரத்தின் இறுதி மக்கள் பேரணியானது இன்று மாலை 4.00 மணிக்கு மஹரகமவில் அக்கட்சின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (11)...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

UPDATE - 09.30 ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி,...

இன்று சர்வதேச அன்னையர் தினம்

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அன்னையர்...