follow the truth

follow the truth

December, 3, 2024
Homeஉள்நாடுஇரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் அரசியல் வினாக்கள் குறித்து அவசர விசாரணை

இரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் அரசியல் வினாக்கள் குறித்து அவசர விசாரணை

Published on

களுத்துறை மாவட்டம் C.W.W கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் அரசியல் வினாக்கள் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் மட்டத்தில் அவசர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவின் பணிப்புரையின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் பேசப்பட்டு வரும் இந்த வினாத்தாள், குறித்த பாடசாலையினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சு மட்டத்திலோ அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலோ இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமைச்சு மட்டத்தில் நடத்தப்பட்ட முறையான விசாரணையின் பின்னர் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திலகா ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொக்கோ விலை அதிகரிப்பு

இவ்வருடம் ஒரு கிலோகிராம் முதலாம் தர கொக்கோவின் விலை 1,425 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்தில் ஒரு கிலோகிராம் முதலாம்...

வெள்ள அனர்த்தம் – எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய...

சாதாரண தரப் பரீட்சை – விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) ஆண்டுக்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம்...