follow the truth

follow the truth

June, 27, 2025
Homeஉள்நாடுஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து

Published on

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஸ்டேடன் வத்த பகுதியில் இன்று (12) பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேனின் சாரதி படுகாயமடைந்து வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துக்கு எதிர்திசையில் கினிகத்தேனயிலிருந்து ஹட்டன் நோக்கி அதிவேகமாக பயணித்த வேனுக்கு முன்னால் சென்ற முச்சக்கரவண்டி வேனின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. மற்றும் எதிர்திசையில் ஓடிக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியது

இவ்விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் வேனும் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார்...

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...