follow the truth

follow the truth

December, 3, 2024
HomeTOP1சுமார் 13 மில்லியன் ரூபா கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் கைது

சுமார் 13 மில்லியன் ரூபா கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் கைது

Published on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் போதைப்பொருளை கொண்டு வந்த சந்தேகத்தின் பேரில் சியரா லியோன் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்கேன் பாரிசோதனை செய்த போது, அவர் உடலில் மறைத்து போதைப்பொருளை கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

32 வயதான சந்தேகநபர், துருக்கி விமானம் ஒன்றின் ஊடாக நாட்டுக்கு வந்துள்ளார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர் விழுங்கிய போதைப்பொருள் அடங்கிய 17 குழிசைகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் கொக்கெய்ன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி சுமார் 13 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொக்கோ விலை அதிகரிப்பு

இவ்வருடம் ஒரு கிலோகிராம் முதலாம் தர கொக்கோவின் விலை 1,425 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்தில் ஒரு கிலோகிராம் முதலாம்...

வெள்ள அனர்த்தம் – எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய...

சாதாரண தரப் பரீட்சை – விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) ஆண்டுக்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம்...