follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுயாழ்ப்பாணத்தில் இளைஞன் மீது வாள் வெட்டு!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் மீது வாள் வெட்டு!

Published on

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை வாள் வெட்டு கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு அருகில் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வாள் வெட்டு கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்பு

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று...

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு...

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து...