follow the truth

follow the truth

December, 12, 2024
Homeஉள்நாடுஉள்நாட்டு வெங்காய விலை அதிகரிப்பு

உள்நாட்டு வெங்காய விலை அதிகரிப்பு

Published on

இன்று (20) காலை நிலவரப்படி உள்நாட்டு பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் மொத்த விலை 400 ரூபாவாகவும் வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஓலந்து, துாத்துக்குடி, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் விலை ஒரேயடியாக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்படி இன்று (20) காலை தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ உள்ளூர் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 380-400 ரூபாவாக இருந்ததாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள் இந்த விலை உயர்வைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போதிலும், கடந்த காலங்களில் உள்ளூர் பெரிய வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய வணிகர்கள் வெங்காயத்தை மறைத்து வைத்து விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் சோதனை

சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார...

முதல் தடைவயாக 200 பில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டிய சுங்கத் திணைக்களம்

2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான...

பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை ஆர்வம்

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie...