follow the truth

follow the truth

December, 13, 2024
HomeTOP1கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியது

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியது

Published on

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியது.

அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

குறித்த பரீட்சை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 333,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,793 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவதாகப் பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகத் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்தார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் போது காலநிலையினால் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் 117 என்ற துரித இலக்கத்திற்கோ அல்லது, பரீட்சைகள் திணைக்களத்தின் துரித இலக்கமான 1911 இற்கோ அழைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் சோதனை

சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார...

முதல் தடைவயாக 200 பில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டிய சுங்கத் திணைக்களம்

2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான...

பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை ஆர்வம்

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie...