follow the truth

follow the truth

December, 13, 2024
HomeTOP2"பிடியாணை மட்டும் போதாது..நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்கனும்"

“பிடியாணை மட்டும் போதாது..நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்கனும்”

Published on

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் – ஹாமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஈரான் உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார். இஸ்ரேல் பலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வரும், நிலையில் கடந்த ஆண்டு முதல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் திகதி முதல் இஸ்ரேலின் நடவடிக்கை பதில் கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இஸ்ரேலுக்குள்ளேயே நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், பலரை பணைய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் தொடங்கி பல மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக பிற பகுதிகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போர் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் மீது இஸ்ரேல் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கிறது.

மேலும் ஐநா ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் அங்கு இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்தது. ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகள் மீதும் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. அந்த வகையில் லெபனான் ஹிஸ்புல்லாக்கள், ஏமனின் ஹைத்திக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதலில் 1,700 குழந்தைகள் உட்பட 42,000 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்திரலையில் காசா பகுதியில் மனித குலத்திற்கே எதிரான போர் குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் காலண்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது தயிப் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, யோ காலண்ட், முஹம்மது தயீப், இப்ராஹீம் அல் மஸ்ரி ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது. இதற்கு எதிராக இஸ்ரேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அதனை சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்த நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஈரான் உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார். ஈரானின் துணை ராணுவப்படையின் தன்னார்வப் பிரிவான பாசிஸ் வீரர்களுடன் பேசிய அவர்,“காசா, லெபனானில் சியோனிச ஆட்சி போர் குற்றம் செய்திருக்கிறது. தற்போது அவர்களை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து இருக்கிறது. இது மட்டும் போதாது. நெதன்யாகு மற்றும் சியோனிச ஆட்சி கிரிமினல் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவிலிருந்து 440 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை இந்தியாவிலிருந்து 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால்...

400 பில்லியன் டொலர் சொத்துக்களை சேகரித்த முதல் நபர் எலான் மஸ்க்

உலகின் 400 பில்லியன் டாலரைத் தாண்டிய உலகின் முதல் நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றுள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ்...

இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும்...