follow the truth

follow the truth

December, 13, 2024
HomeTOP1அம்பாறையில் உழவு இயந்திரம் விபத்து – மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது

அம்பாறையில் உழவு இயந்திரம் விபத்து – மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது

Published on

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 26ஆம் திகதி மதரசா முடிந்ததும் குறித்த மாணவர்களுக்கு வீட்டுக்குச் செல்ல பேருந்து இல்லாத காரணத்தினால் குறித்த மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி பணத்தினை வழங்கியவர் அதிபரே எனத் தெரியவந்துள்ளமையே இதற்குக் காரணம்.

வெள்ளம் காரணமாக பேருந்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் பணத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரத்தில் பிள்ளைகளை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமை மேலும் தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் 11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிர்ப்பிழைத்த நிலையில் மேலும் 6 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இதுவரை 5 மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவனை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர உழவு இயந்திர சாரதி மற்றும் மற்றுமொருவரின் சடலங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் சோதனை

சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார...

முதல் தடைவயாக 200 பில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டிய சுங்கத் திணைக்களம்

2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான...

பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை ஆர்வம்

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie...