follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

Published on

சுகயீனம் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்புக்கு சென்ற சமயம் , சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில் , கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளளார்.

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் சிவாஜிலிங்கம் கடந்த காலங்களில் எடுத்த அரசியல் தீர்மானங்களினால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்குத் தெரிவான அவர், அண்மையில் வடக்கில் மாவீரர்களைக் கொண்டாடும் போது கேக் வெட்டிக் கொண்டாடிய சம்பவம் நாடளாவிய ரீதியில் பேசப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...