follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1விமான நிலையம் - சுங்கத் திணைக்களத்தில் நடைபெறும் ஊழல்,மோசடிகளை மட்டுப்படுத்த நடவடிக்கை

விமான நிலையம் – சுங்கத் திணைக்களத்தில் நடைபெறும் ஊழல்,மோசடிகளை மட்டுப்படுத்த நடவடிக்கை

Published on

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் குடிவரவு- குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் ,விமான நிலையம் , விமான சேவை நிறுவனம் ஆகியவற்றின் தலைமையதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

போதைப்பொருள்,சட்டவிரோத பொருள்கள் நாட்டிற்குள் வருவதைத் தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்படுத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதற்காக, குடிவரவு – குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம்,விமான நிலையம்,விமான சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு,கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கினார்.

அதேபோல், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், நாட்டு மக்கள் மத்தியில் சுங்கம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ், குடிவரவு கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) பீ.எம்.டி. நிலுஷா பாலசூரிய, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தேசிய வரவு செலவு) ஜூட் நிலுக் ஷான், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...