follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2"பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுங்க.. அதுபோதும்"

“பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுங்க.. அதுபோதும்”

Published on

தற்போதைய அரசாங்கத்தால், பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்ய முடிந்தால், அதுவே போதுமானதாக இருக்கும் என்று, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“..மக்கள் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்துள்ளனர். இந்தநிலையில், அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்போது செய்வதாகக் கூறுவது போல, சிறிய கார்களிலோ அல்லது பேருந்துகளிலோ பயணிப்பதில் தமக்கு பிரச்சினையில்லை.

எனினும் அதனைவிட, அரசாங்கம் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே முக்கியமானது.

நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆகவே கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும்..” என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகை – நாடு முழுவதும் 7437 தன்சல்கள் பதிவு

வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல் ஏற்பாட்டாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர்...

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...