கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை மூடப்படவுள்ளதாக கண்டி வலய கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கண்டியில் வருடாந்திர எசல பெரஹெராவின் போது எதிர்பார்க்கப்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து சவால்கள் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தங்குமிடமாகப் பயன்படுத்தப்படும் என்றும் வலயக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனால் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலை நாட்களுக்குப் பதிலாக வேறு நாட்களில் பாடசாலையை நடத்துவது தொடர்பான யோசனையை சமர்ப்பிக்குமாறும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.