follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2"நாட்டை மட்டுமல்ல இனப்பிரச்சினையும் கிளீன் செய்ய வேண்டும்"

“நாட்டை மட்டுமல்ல இனப்பிரச்சினையும் கிளீன் செய்ய வேண்டும்”

Published on

இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று(02) அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. மலர்ந்திருக்கும் புதுவருடம் இன ஒற்றுமையுடன் கூடிய இனப்பிரச்சினையை தீர்த்து வைக்கும் அவர்களின் இலக்கை அடையும் புதுவருடமாக அமையும் என்ற எதிர்பார்ப்போடு காலடி எடுத்து வைக்கின்றோம்.

இலங்கை நாட்டில் வருமானம் தரக்கூடிய பொருளாதாரம் எவையும் இல்லை. பொருந்தோட்ட பொருளாதாரமும் இல்லை. சுற்றுலாப்பயணிகளின் வருகையை மட்டும் தான் இப்போதைக்கு இருக்கின்றது.

இலங்கை உலக நாடுகள் மற்றும் நாணய நிதியத்திடம் வாங்கிய கடனை கட்டுவதென்றால் உடனடி வழிமுறை கூட இல்லை. நெல் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையின் கைத்தொழில் துறையும் எதிர்பார்த்த இலாபத்தை அடையவில்லை. இலங்கை அரசாங்கம் கிளீன் சிறிலங்கா போன்று புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கும் கிளீன் திட்டத்தை கொண்டு வருவார்களாக இருந்தால் உலகத்திலுள்ள தமிழர்களின் நிதியுடன் வடக்கு கிழக்கில் புதிய அபிவிருத்தியை அரசாங்கம் உருவாக்க தயார்.

ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் இங்குள்ள பல தொழிற்சாலைகள் இன்னும் இயங்க முடியாது உள்ளது. இவற்றை இயக்குவதற்கான பண பலத்தை உலகத்தமிழர்கள் கொண்டுள்ளனர்.

80 ஆண்டுகளாகவுள்ள இனப்பிரச்சினைக்கு இதயசுத்தியுடன் ஒரு பிரச்சினையை அடையாளம் காண்பார்களாயின் அதிலும் இந்த அரசு இதை காணுமாயின் அது ஒரு புதிய மாற்றத்தை இலங்கைக்கு கொடுக்கும் சிங்கள மதகுமார்களிடமும் சிங்கள மக்களிடமும் தற்போதும் இனப்பிரச்சினை விடயத்தில் பௌத்த வரலாறுகளோடு வாழ்கின்றனர்.

இவற்றிலிருந்து வெளியே வரவேண்டும் பொலிஸ், காணி அதிகாரங்களை தந்து நாங்கள் சுயாட்சியாக வாழ வழிவிடவேண்டும். எப்பொழுதும் சமாதானமாக பேசுவதற்கு எங்களுடைய சமாதான கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும்..” என தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...