follow the truth

follow the truth

August, 24, 2025
Homeலைஃப்ஸ்டைல்ABC ஜூஸ் தினமும் குடிக்கலாமா? எடைக்குறைப்புக்கு இந்த ஜூஸ் உதவாது

ABC ஜூஸ் தினமும் குடிக்கலாமா? எடைக்குறைப்புக்கு இந்த ஜூஸ் உதவாது

Published on

சிவப்பு நிறமும் சிறிது இனிப்பு சுவையும் கொண்ட பீட்ரூட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காய். இதன் ஜூஸில் நிறைய ஆரோக்கியப்பலன்கள் இருப்பதால் பெரியவர்களுக்கும் பீட்ரூட் பிடிக்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன; பீட்ரூட்டை சமைக்காமல் சாப்பிடலாமா; ஏ.பி.சி ஜூஸ் தினமும் அருந்தலாமா என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.

ரத்தக்குழாய்களை அமைதிப்படுத்தி ரத்தம் சீராக உடலில் பரவ உதவும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கவும் பீட்ரூட் உதவுகிறது.

எந்த வகை காயாக இருந்தாலும் அதனை வேக வைக்காமல் சாப்பிட்டால் உடலுக்கு அதிக சத்துகள் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால், பீட்ரூட்டை பச்சையாக சாப்பிட்டால் செரிமானப்பிரச்னைகள் ஏற்படும். பீட்ரூட்டை வேக வைத்து மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட்டில் இருக்கிற தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், பீட்ரூட் வேகவைத்த தண்ணீரில் கரைந்து விடும் என்பதால் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் அருந்த வேண்டும்.

செரிமானக்கோளாறு உள்ளவர்கள், சிறுநீரகக்கோளாறு உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் பீட்ரூட்டை தவிர்ப்பது நல்லது. இரும்புச்சத்துக்காக சாப்பிட வேண்டும் என்றால், டயட்டீஷியன் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பீட்ரூட்டுக்கு மாற்றாக கீரை, பெரிய நெல்லிக்காய் என்று சாப்பிடலாம்.

ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றையும் சேர்த்து ஏபிசி ஜூஸ் செய்கிறார்கள் (Apple, Beetroot, Carrot – ABC).

உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் முயற்சியில் இருப்பவர்கள், சருமம் பளபளப்பாக மாற விரும்புவர்கள் இந்த ஜூஸை தினமும் அருந்துகிறார்கள். இது ஊட்டச்சத்தை அதிகரிக்கும், சருமத்தை பளபளப்பாக்கும் என்பது உண்மைதான். ஆனால், எடைக்குறைப்புக்கு ஏ.பி.சி ஜூஸ் உதவாது. தவிர, இந்த ஜூஸில் இருக்கிற சர்க்கரை ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கும் என்பதால், நீரிழிவு இருப்பவர்கள் ஏ.பி.சி ஜூஸ் அருந்தக்கூடாது. மற்றவர்கள் ஏ.பி.சி ஜூஸ் அருந்தலாம் என்றாலும், தினமும் தேவையில்லை. வாரத்துக்கு இரண்டு நாள் போதும். அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சுதான்.’

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஓட்ஸ் வடை

ஓட்சில் இரும்பு சத்து, மெக்னீஷியம் உட்பட பல விதமான புரத சத்துகள் உள்ளன. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். உடல் எடையை...

இரவில் வேலை… பெண்களின் ஹார்மோன்களில் ஏற்படும் சிக்கல்கள்!

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இரவு பணி என்றால் ஆண்கள்தான் செய்வார்கள் என்ற...

எடை குறைப்புக்கு ஏற்ற உணவு முறை இதுதான்

குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) உடல் எடை குறைப்பதற்கு நன்மை பயக்கும் கருவியாக இருக்கும்...