follow the truth

follow the truth

February, 15, 2025
HomeTOP1லொஸ் ஏஞ்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீயினால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

லொஸ் ஏஞ்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீயினால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மணித்தியாலத்துக்கு சுமார் 96 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், தற்போதைய காட்டுத் தீப்பரவல் நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காட்டுத்தீப்பரவல் காரணமாக பெலிசேட்ஸ் பகுதியில் 23,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதுடன், ஈடன் பகுதியில் 14,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் காட்டுத்தீ காரணமாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தீயணைப்பு குழுக்கள், காட்டுத்தீ பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13 ஆம் திகதி...

குறைந்த வருமானம் உடைய முதியோர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா கொடுப்பனவு

அஸ்வெசும குடும்பத்திற்குள் உள்ள 70 வயதினைப் பூர்த்தியடைந்த முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில்...

2025 வரவு செலவுத்திட்டம் பெப்ரவரி 17 சமர்ப்பிக்கப்படும்

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) எதிர்வரும் 17ஆம் திகதி மு.ப 10.30...