follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை உலகிற்கு எடுத்துரைக்கும் தைப்பொங்கல் - பிரதமர்

உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை உலகிற்கு எடுத்துரைக்கும் தைப்பொங்கல் – பிரதமர்

Published on

ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் வாழ்த்திச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாற்று நடுவது முதல் விளைச்சலை அறுவடை செய்வதுவரை விவசாய நடவடிக்கைகளுக்கு சூரிய பகவான் உட்பட இயற்கை ஜீவராசிகள் அனைத்தும் செய்யும் உதவிகளுக்கு நன்றி செலுத்தவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது .

நாம் அனைவரும் இயற்கையின் படைப்புக்கள். இயற்கையை மீறி எம்மால் எந்த பயணத்தையும் மேற்கொள்ள முடியாது. இதனால் இயற்கையினூடாக எமக்கு கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு கைமாறு செய்வது மிகவும் உன்னதமான மனிதப் பண்பாகும். நாடு என்ற அடிப்படையில் நாம் விசேட மைல்கற்களை எட்டியுள்ளோம். கட்டமைப்பு மற்றும் கொள்கை ரீதியிலான மாற்றம் உட்பட, மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் பாரிய மற்றும் பாரதூரமான பொறுப்பு எமக்கு உள்ளது. அரசாங்கம் மற்றும் அரசு என்ற அடிப்படையில் நாம் அந்த சவால்கள் நிறைந்த மற்றும் பொறுப்புவாய்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து பரிணாம மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.

அவ்வாறான தருணங்களில் இயற்கையைப் போற்றி அதற்கு நன்றி செலுத்தும் இத்தகையதொரு அற்புதமான பண்டிகையைக் கொண்டாடுவது, மீண்டுமொரு முறை கலாச்சார ரீதியிலான செழிப்பான பிரஜைகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமையும். ஒருவரையொருவர் மதித்தல் மற்றும் மற்றவர்களின் மதம், கலாச்சார உரிமைகளை மதிக்கும் விசேட மனித பண்புகள் மற்றும் நல்லிணக்கத்தில் பூரணமடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்த தைப்பொங்கல் தினத்தில் நாம் மீண்டுமொரு முறை உறுதிகொள்வோம்.

தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் சமூகத்தின் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் தினமாக இன்றைய தினம் அமைய வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...