follow the truth

follow the truth

February, 13, 2025
Homeஉள்நாடுகோதுமை மாவின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டால் பாண் 100 ரூபா – பேக்கரி...

கோதுமை மாவின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டால் பாண் 100 ரூபா – பேக்கரி உரிமையாளர்கள்

Published on

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும்.வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அந்த அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன உள்ளிட்ட பேக்கரி உரிமையாளர்கள் குழு இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டது.

டொலரின் விலை குறைந்துள்ள போதிலும் ஒரு கிலோ கோதுமை மாவை 190 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

ஒரு கிலோவுக்கு 45 ரூபா வரி குறைக்கப்பட்டு, கோதுமை மாவை இறக்குமதி செய்ய எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கினால், நிறுவனங்களின் ஏகபோக உரிமை உடைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

பாண் விலை அதிகரிப்பினால் பாண் பாவனை ஓரளவு குறைந்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும், அதற்காக கோதுமை மா மற்றும் வெண்ணெய் இறக்குமதியாளர்களை அழைத்து உடனடியாக கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹொரணை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இன்று (13) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி...

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 250ற்கும் அதிகமானோர்  விடுவிப்பு

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250க்கும்...

சுஜீவ தாக்கல் செய்த மனு செப்டம்பர் 10 விசாரணைக்கு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுஜீவ சேனசிங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க...