follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

Published on

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.

போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.

அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது. இந்த நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அதற்கு பிந்தைய வழிமுறைகள் குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

அதன்படி,பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் அமைச்சரவை கூட்டம் இன்று கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து நிபந்தனைகள் எட்டப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தை குழுவால் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடைசி நிமிட சலுகைகளை பெறுவதற்காக ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை குற்றம் சாட்டி இருந்தது. இந்த குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்தது.

“பிரதமர் அரசியல்-பாதுகாப்பு அமைச்சரவையை கூட்ட உத்தரவிட்டார். பின்னர் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அரசாங்கம் கூடும்,” என்று நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகளின் குடும்பங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் திரும்பியதும் அவர்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அது மேலும் கூறியது.

இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும். இதைத் தொடர்ந்து பாலஸ்தீன கைதிகளுக்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வது, போருக்கு நிரந்தர முடிவுக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்படும்.

போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் அமெரிக்கா கடந்த புதன் கிழமை அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார். சுமார்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ராகம வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச...