follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுவல்சபுகல விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்!

வல்சபுகல விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்!

Published on

வல்சபுகல விவசாயிகள் இன்று முற்பகல் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தீர்விற்கு திருப்தியடைய முடியாது என தெரிவித்தே மீண்டும் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை – கட்டுவெவ முச்சந்தியில் இன்று  முற்பகல் எதிர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயத்தை உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு கோரி வல்சப்புகல பிரதேச விவசாயிகள் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி முதல் 105 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...