follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP2கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு - இருவர் கைது

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

Published on

கடந்த 16 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்ற சந்தேக நபரும், குற்றத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபரும் நேற்று (17) கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திலும், கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்திலும் சட்டத்தரணிகள் மூலம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என்றும், கொழும்பு 13 ஐ சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இன்று (18) புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸாரும் கொழும்பு வடக்கு குற்றப் விசாரணை பணியகமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...