follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉலகம்லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு

Published on

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 18-ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் பெப்ரவரி 18, 2025 வரை தொடர்ந்து அமுலில் இருக்கும்” என்று வெள்ளை மாளிகை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பிடிபட்ட லெபனான் கைதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் டொனால்டு டிரம்பின் வெள்ளை மாளிகை கூறியது. இது இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இடையில் சிறிய அளவில் சண்டையை ஏற்படுத்தியது.

தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்நிறுத்தம் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. நேற்றும் இஸ்ரேல் படைகள் 22 பேரை கொன்ற நிலையில் போர் நிறுத்தம் என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது என லெபனான் சுகாதார துறை தெரிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரும் – ட்ரம்ப்

ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து...

சீனாவின் புதிய அறிவிப்பு – 74 நாடுகளுக்கு விசா தேவை இல்லை

சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், சீனா தற்போது 74 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் (Visa-Free) நாட்டிற்குள் 30 நாட்கள்...

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா - முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி இன்று...