follow the truth

follow the truth

August, 30, 2025
HomeTOP2டிரம்ப்-ஐ சந்திக்க பெஞ்சமின் நெதன்யாகு திட்டம்?

டிரம்ப்-ஐ சந்திக்க பெஞ்சமின் நெதன்யாகு திட்டம்?

Published on

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அவர் வாஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பயணம் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைவதால் நெதன்யாகுவின் உடல்நிலையை பொறுத்து இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய தகவல்களின் படி பயணம் செய்தால், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவராக நெதன்யாகு இருப்பார். முன்னதாக இஸ்ரேலுக்கு தற்காப்பு கருவிகள் வழங்கியதற்காக ஜனாதிபதி டிரம்பிற்கு பெஞ்சமின் நெதன்யாகு ஜனவரி 26-ம் திகதி நன்றி தெரிவித்தார்.

இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், “இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், நமது பொதுவான எதிரிகளை எதிர்கொள்ளவும், அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் தேவையான கருவிகளை வழங்குவதாக நீங்கள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியதற்காக ஜனாதிபதி டிரம்பிற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...