follow the truth

follow the truth

February, 14, 2025
HomeTOP2ஷேக் ஹசீனா மகளை டிஸ்மிஸ் பண்ணுங்க : உலக சுகாதார நிறுவனத்துக்கு பங்களாதேஷ் நெருக்கடி

ஷேக் ஹசீனா மகளை டிஸ்மிஸ் பண்ணுங்க : உலக சுகாதார நிறுவனத்துக்கு பங்களாதேஷ் நெருக்கடி

Published on

உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனராக இருக்கும் ஷேக் ஹசீனாவின் மகளை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கும்படி பங்களாதேஷ் அரசு வலியுறுத்தியுள்ளது.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா, அந்நாட்டில் நடந்த அரசு எதிர்ப்பு போராட்டத்தால் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இந்நிலையில் பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த அரசு, ஷேக் ஹசீனாவை தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தில் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனராக இருக்கும் ஹசீனாவின் மகள் சாய்மா வாஜித்தை நீக்கும்படி, அந்த அமைப்புக்கு வங்கதேசம் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளது.
டில்லியில் வசிக்கும் சாய்மா வாஜித், அடிப்படையில் ஒரு டாக்டர். நரம்பியல் கோளாறுகள் தொடர்பான சிறப்பு மருத்துவர். இவர் கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் தான் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

தற்போது அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வந்துள்ளதால், அவரை பதவியில் இருந்து நீக்கும்படி வங்கதேச வெளியுறவு அமைச்சகம், உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. எனினும் அதற்கு வாய்ப்பில்லை என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஐ.நா., அமைப்பு விதிகளின்படி, ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டவர், தன் சொந்த தகுதியால் தான் அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார். குறிப்பிட்ட அந்த நாட்டில் அரசு கவிழ்ந்தாலும், அவர் தன் பதவிக்காலம் முடியும் வரை அந்த பதவியில் நீடிப்பார்’ என்று, பங்களாதேஷில் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டப் பரீட்சையில் நாமல் காப்பி அடித்தாரா? சிஐடி விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு சட்டவிரோதமாக...

பிரான்சில் புகழ்பெற்ற அருங்காட்சியகமான பாம்பிடோ மையம் மூடப்பட்டது

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் (The Centre Pompidou) என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் உள்ளது. தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும்,...

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்ளது. மேலும்...