follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுவசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல்

வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல்

Published on

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமற்போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி அமல் ரணராஜா குறித்த வழக்கில் இருந்து நேற்று விலகினார்.

இதனையடுத்து இந்த வழக்கு புதிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வசந்த கரன்னாகொட தாக்கல் செய்திருந்த மனுவின் நீதிபதிகளான மாயாதுன்னே கொரயா, பி. குமரன் ரத்தினம், சஷி மகேந்திரன், தமித் தோட்டவத்தே மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், ​​குறித்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதி அமல் ரணராஜா, தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அமல் ரணராஜா முன்னர் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், எனவே இந்த வழக்கின் விசாரணையிலிருந்து அவர் விலகுவதாகவும் நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதிபதி மாயாதுன்னே கொரயா தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...